நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஆல்பம் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் அர்ஜுன் தாஸ். இதையடுத்து இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் இயக்குனர் அட்லி தயாரிப்பில் வெளியான அந்தகாரம் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#PottumPogattume @filmmaker_logi
@Itslavanya @RaviSathyajit X @JenMartinmusic@thinkmusicindia➡️ https://t.co/YnhRrlKkCz pic.twitter.com/vP5TrwFWx2
— Arjun Das (@iam_arjundas) May 15, 2021
இந்நிலையில் அர்ஜுன் தாஸ், லாவண்யா திரிபாதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஆல்பம் பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘போட்டும் போகட்டுமே’ என்கிற இந்த பாடலை ஷாம் சசிகுமார், சத்திய நாராயணன் இருவரும் இணைந்து பாடியிருக்கின்றனர். மெட்ராஸ் லோகி விக்னேஷ் இயக்கியுள்ள இந்த பாடலை தீம் மியூசிக் இந்திய நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற மே 20-ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.