கனடாவில் வசிக்கும் தம்பதி, டெல்லியில் மகனை தனியாக விட்டுவிட்டு தவித்துவருகிறார்கள்.
இந்தியாவை சேர்ந்த தம்பதி Nupur மற்றும் Ajay Soin. இவர்களுக்கு கடந்த 2018 ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனைத்தொடர்ந்து, Ajay கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு சென்றிருக்கிறார். Nupurக்கு ஏற்கனவே திருமணமாகி Shaurrya என்ற 15 வயது மகன் உள்ளார்.
இந்நிலையில் Nupur தன் கணவரை பார்க்க visitor visa மூலம் கனடா சென்றுவிட்டார். இவர்கள் தங்கள் மகன் Shaurrya விற்கு நிரந்தர வாழிட உரிமம் கோரி இரண்டு வருடங்களுக்கு முன்பு விண்ணப்பித்திருக்கிறார்கள். எனினும் தற்போது வரை அதற்கு பதில் வரவில்லை. எனவே Shaurrya தன் தந்தையும் இறந்துவிட்டதால் டெல்லியில் இருக்கும் தன் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார்.
இதுகுறித்து Nupur கூறியுள்ளதாவது, எங்கள் மகனின் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது என்று இணையதளத்தில் பார்த்தால் விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாகவே பதில் கிடைக்கிறது. தற்போது டெல்லியில் கொரோனா தீவிரம் அதிகமாக இருக்கிறது. எனவே தன் மகன் மற்றும் தாயை எண்ணி தூக்கமில்லாமல் தவிப்பதாகவும், மன அழுத்தத்திற்கு உள்ளாகி மருத்துவரை அணுகி மாத்திரைகள் எடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.