லோடு ஆட்டோ மோதியதில் சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிதம்பர நகர் பகுதியில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்ற கூலித்தொழிலாளி தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இளங்கோவன் அதிகாலை வேளையில் சாலையைக் கடக்க முயற்சி செய்த போது அவ்வழியாக வேகமாக வந்த லோடு ஆட்டோ இளங்கோவன் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லோடு ஆட்டோ டிரைவரான செல்வம் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.