Categories
உலக செய்திகள்

வாகனத்தில் சென்றபோது சிகரெட் பிடித்த நபர்.. சானிடைசர் பயன்படுத்தியதால் நேர்ந்த விபரீதம்.. வெளியான புகைப்படம்..!!

அமெரிக்காவில் ஒரு நபர் வாகனத்தில் சிகரெட் பிடித்துக்கொண்டே சானிடைசர் பயன்படுத்தியதால் வாகனம் முழுவதும் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள Maryland என்ற பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் சிகரெட் பிடித்துக்கொண்டே சானிடைசர் வைத்து தன் கைகளை சுத்தம் செய்திருக்கிறார். அப்போது அவரின் சிகரெட்டிலிருந்து தீபொறி ஒன்று கையில் விழுந்து எரிந்ததில் வாகனம் முழுவதும் தீ பரவியது.

இதில் வாகனம் முழுக்க எரிந்துவிட்டது. அந்த நபர் நல்லவேளையாக உயிர் பிழைத்து விட்டாலும்  அவரது கை மற்றும் தொடைகளில் தீ காயம் ஏற்பட்டதால், தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். எனவே தீயணைப்பு வீரர்கள், புகை பிடிக்கும்போது, சானிடைசர் பயன்படுத்தாதீர்கள், அது பெரும் ஆபத்தை உருவாக்கிவிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |