இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். தற்போது ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மே 23ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதாக அறிவித்துள்ளார்.