ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் பாறைகள் நிறைந்த பகுதியில் செல்ஃபி எடுக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்தார்.
ஆஸ்திரேலியாவின் டைமண்ட் வளைகுடா என்ற இடத்திற்கு அவ்வப்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம். அதன்படி சென்ற சனிக்கிழமையும் நிறைய சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அதில் 27 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் 200 அடி உயரமுள்ள பாறைகள் நிறைந்த பகுதியில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார்.
அவர் செல்ஃபி எடுக்கும்போது காற்று மிகவும் பலமாக வீசியது. இதனால் தன் நிலைதடுமாறிய அப்பெண் கால் இடறி திடீரென கீழே விழுந்தார். இதில் பாறைகளில் பலமாக மோதியதில் உயிருக்கு மிகவும் இக்கட்டான நிலையில் இருந்த அந்தப் பெண் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்.பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் வருத்தப்படக்கூடியது என்னவென்றால் பெண் விழுந்த அதே இடத்தில் அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்ததுதான். இது அங்கிருந்த போலீசாரையே வருத்தத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.