கர்நாடகாவில் நாளை அமைச்சர்கள் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.ஆனால் கர்நாடக அமைச்சரவை இதுவரை பதவி ஏற்கவில்லை.இந்நிலையில் நாளை மறுநாள் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக டெல்லி சென்றுள்ள கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கட்சித் தலைவர் அமித் ஷாவுடன் அமைச்சரவை பட்டியல் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் முதல் கட்டமாக 13 முதல் 14 பேருக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. புதிய அமைச்சர்கள் யார் என்ற விவரம் நாளை தெரியவரும் என தகவல் வெளியாகியுள்ளது.