கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லாரம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசி என்ற மகன் இருந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சசி தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து சசி அவதானப்பட்டி அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விட்டது.
இதனால் படுகாயமடைந்த சசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.