Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக்கு சென்ற வாலிபர்…. வேகமாக வந்த தனியார் ஆம்புலன்ஸ்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

இருசக்கர வாகனம் மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள நடுப்பாளையம் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் தனது இரு சக்கர வாகனத்தில் ஈரோட்டில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு புறப்பட்டு உள்ளார். இதனை அடுத்து மோகன் பெருந்துறை சிப்காட் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் இவரின் இருசக்கர வாகனம் மீது பலமாக மோதி விட்டது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மோகனை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுநரான முகம்மது ஹபிப் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |