இங்கிலாந்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் 3 கோபுரங்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.
இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டுஷைர் என்ற இடத்தில் செயலிழந்த மின்மையத்திற்கான குளிரூட்டும் 3 கோபுரங்கள் கட்டப்பட்டு இருந்தன. இதனால் இந்த 3 கோபுரங்களை முற்றிலுமாக இடிப்பதற்கு ஆக்ஸ்போர்டுஷயர் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன் படி 375 -அடி உயரம் கொண்ட அந்த 3 கோபுரங்களுக்கும் வெடி வைத்து நொடிப்பொழுதில் தகர்க்கப்பட்டன. அந்த 3 கோபுரங்களும் சரிந்து கீழே விழுந்த நிலையில் தரையில் அதிக சத்தத்துடன் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக 1000 அடி தூரத்தில் இருந்த மின்கம்பங்கள் அனைத்தும் வெடித்து தீப்பற்றி எரிந்தன.
இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த சுமார் 40,000 -த்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.