புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேலதேமுத்துப்பட்டியில் கணேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கொண்டிருந்த நிலையில் மனவேதனையடைந்த அவர் காட்டுப் பகுதிக்குச் சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.