Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த ஐடியா நல்லா இருக்கே…. பெண் ஊழியரின் சிறப்பான விழிப்புணர்வு… குவியும் பாராட்டுக்கள்…!!

தமிழ் எழுத்துக்களை கோலங்களில் வரைந்து ஓய்வு பெற்ற பெண் ஊழியர் விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோழனூர் பகுதியில் அனுத்தமா சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு கருவூலத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் தமிழ் எழுத்துக்களின் மீது ஆர்வம் கொண்ட அனுத்தமா சீனிவாசன் பல இடங்களில் முற்காலத்தில் உள்ள தமிழ் மொழியின் குறிப்புகளை தேடி எடுத்துள்ளார். இதுகுறித்து அனுத்தமா சீனிவாசன் கூறும்போது, தமிழை நன்றாக எழுதவோ, படிக்கவோ தெரிந்தவர்களுக்கு அதிலிருக்கும் 247 எழுத்துகளையும் சொல்வதற்கு தயக்கம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ஒரு குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு தமிழ் எழுத்துக்கள் பற்றி தெரிந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அது எளிதில் புரிந்து விடும் என்ற எண்ணம் அனுத்தமா சீனிவாசனுக்கு வந்துள்ளது. இதனையடுத்து பெண்களுக்கு தமிழ் எழுத்துக்கள் என்னவென்று தெரிய வேண்டும் என்பதற்காக கோலத்தில் தமிழ் எழுத்துக்களை வரைந்து அனுதமா விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு வீடுகளுக்கு முன்பு கோலம் போடும் போது அதிலுள்ள தமிழ் எழுத்துக்களை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |