புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மதயானைபட்டி, களிமங்கலம், வில்லாரோடை உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தததை கண்டு பிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்த போது கலிமங்களம் கிராமத்தைச் சேர்ந்த நவீன்ராஜ் என்பதும் கோரையாற்றிலிருந்து மணல் கடத்தி வந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரிடமிருந்து மணலுடன் மாட்டுவண்டியை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.