சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஊறுகாய் செய்யலாம் வாங்க ..
தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய் – 5
எலுமிச்சம்பழம் – 2
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் நெல்லிக்காயை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வைத்து வேக வைக்க வேண்டும்.பின் நெல்லிக்காய்களை உதிர்த்து கொட்டைகளை நீக்கி கொள்ள வேண்டும்.அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பொடியாக்கிய வெந்தயம் மற்றும் சீரகத்தூளைச் சேர்த்து , ஊறுகாயில் கொட்டி கிளறினால் நெல்லிக்காய் ஊறுகாய் தயார் !!!