Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மே 26-ந் தேதி கறுப்பு தினம்…. விவசாயிகள் அறிவிப்பு…..!!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு அவர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமன்றி தற்போது வரை போராட்ட களத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

அதனால் ரயில் மறியல் போராட்டம், உண்ணாவிரதம், மாபெரும் டிராக்டர் பேரணி உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்திய போதிலும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் போராட்டம் தொடங்கிய ஆறு மாதங்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு மே 26-ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். மேலும் பிரதமர் மோடி பதவியேற்று அன்றுடன் ஏழு ஆண்டுகள் முடிவடைவதை ஒட்டியும் கருப்பு தினம் கடைபிடிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |