Categories
மாநில செய்திகள்

முன்களப்பணியாளர்களாக இனி…. இவர்களும் கருதப்படுவார்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. கொரோனா தடுப்பு பணியில் செவிலியர்கள், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களின் பங்கு மிக பெரியது.

முன்களப்பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கொரோனா கால பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் பத்திரிக்கையாளர்களை முன்களப்பணியாளர்களாக தமிழா அரசு அறிவித்தது. இந்நிலையில் தகன மேடைகளில் பணிபுரிபவர்கள் கொரோனா முன்களப் பணியாளர்களாக கருதப்படுவர் என் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |