திருச்சி அரசு மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்து நோயாளிக்கு இலவசமாக சிகிச்சை வழங்க மருத்துவமனை டீன் அர்ச்சையா ஆணை பிறப்பித்துள்ளார்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கனக்கான பொதுமக்களும் , நோயாளிகளும் சிகிச்சை பெற்று விட்டு செல்கின்றனர். இதில் உடல்நலம் பாதித்த மாற்றுத்திறனாளி மகள் அனுஸ்ரீக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு துணைக்கு உதவியாக அவரின் தாய் மேரி இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் உள்ள ஃபேன் கழன்று ஜேம்ஸ் மேரி தலையில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
மருத்துவமையில் அலட்சியத்தால் மேரி தலையில் ஃபேன் விழுந்து படுகாயமடைந்த மேரிக்கு ஸ்கேன் செய்ய அரசு மருத்துவமனை நிர்வாகம் 500 கட்டணம் கேட்டுள்ளது. இதனிடையே ஸ்கேன் செய்வதற்கு 500 ரூபாய் கட்டணம் இல்லாததால் தாய் மேரி மகள் அனுஸ்ரீ தவிர்த்து வந்த நிலையில் அரசு மருத்துவமனை டீன் அர்ச்சையா தலையில் பேன் விழுந்து காயமடைந்ததற்கு இலவச சிகிச்சை வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.