திருமணமான மூன்று மாதங்களில் புது பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் பகுதியில் அருமை ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அண்ணா வளைவு பகுதியில் வசிக்கும் லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் புதுமண தம்பதிகள் இருவரும் காட்டூர் பகுதியில் இருக்கும் பாரதிதாசன் நகரில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது காதல் மனைவியான லதாவை அருமை ராஜ் தனது பெற்றோரிடம் விட்டு விட்டு வேலைக்காக வெளியூருக்கு சென்றுள்ளார்.
இதனை அடுத்து குடும்பத்திற்குள் நடைபெற்ற பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த லதா திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த திருவெறும்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமணமான மூன்று மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.