சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கல்லூரி சாலையில் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக வடக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த திருவாடானை அருகே உள்ள அடுத்தக்குடி கிராமத்தில் வசித்து வரும் ரவி ( 50 ) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்த 192 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.