Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

புதிய கட்டுப்பாடுகள்… காலை 10 மணிக்கு கடைகள் அடைப்பு… வெறிச்சோடிய சாலைகள்..!!

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் அமலில் வந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவையயான மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் திருவாரூர் கடைவீதி, நகை கடை சந்து, மார்கெட் சாலை மற்றும் நேதாஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

Categories

Tech |