Categories
சினிமா தமிழ் சினிமா

தவறாக பேசிய நபரை பிளாக் செய்த சூப்பர் சிங்கர் பிரபலம்…. வைரலாகும் பதிவு…!!!

சமூக வலைதளப் பக்கத்தில் தவறாக பேசிய நபரை பிரபல நடிகை பிளாக் செய்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பவர்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றனர். அந்தவகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சௌந்தர்யா.இவர் பாட்டு பாடுவது மற்றுமின்றி சில சின்னத்திரை நாடகங்களிலும், குறும் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சௌந்தர்யாவிடம் ரசிகர் ஒருவர் தவறாக பேசியுள்ளார். இந்த பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நடிகை சௌந்தர்யா அந்த நம்பரை பிளாக் செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சவுந்தர்யாவின் பதிவு

Categories

Tech |