வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளை புலியை தாக்கிய இளைஞர்களிடம் வனச்சரகர் 500 வசூலித்து விட்டு எச்சரித்து அனுப்பினார்.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பீமா என்கிற 6 வயது வெள்ளைப்புலி வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த வெள்ளை புலியை இளைஞர்கள் சிலர் கல்லால் தாக்கி அதனை காயப்படுத்தியதாக இதனை நேரில் கண்ட பார்வையாளர்கள் பூங்கா நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து பூங்கா வனச்சரகர் கோபக் குமார், புலியை கல்லால் தாக்கிய விஜயன், பிரசாந்த், சந்தோஷ், அருள், சூர்யா, சரத் ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர் அதில் தாங்கள் புலியை தாக்கியதை ஒப்புக்கொண்டனர். ஆனால் அவர்களை சட்டப்படி தண்டிக்காமல் சம்பந்தப்பட்ட புலியை தடுக்கும் வகையில் 6 பேரிடமும் தலா 500 ரூபாயை வசூலித்து விட்டு இனி மேல் இப்படி செய்ய கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.