Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வேலை பார்க்கும் போது கவனிக்கல… அக்காள்-தங்கைக்கு நடந்த விபரீதம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

குட்டையில் மூழ்கி அக்கா, தங்கை என இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள கவுரிசெட்டிபட்டி கிராமத்தில் முருகேசன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு இளையராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாதிகா, தனுஸ்ரீ என்ற 2 மகள்களும், ஒரு ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிகளின் பாட்டியான சத்தியவாணி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 சிறுமிகளையும் கொட்லுமாரம்பட்டியில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து சத்தியவாணி தனது இரண்டு பேத்திகளையும் மல்லிகை தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அதன் பின் சத்தியவாணி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் பாய்ச்சுவதற்கு அமைக்கப்பட்டிருந்த குட்டையில் தேங்கியிருந்த  தண்ணீருக்குள் இரண்டு சிறுமிகளும் தவறி விழுந்து விட்டனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக இருவரையும் காப்பாற்றுவதற்குள் சிறுமிகள் உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாப்பாரப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமிகளின் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |