Categories
தேசிய செய்திகள்

வெளிநாடு உதவிகளுக்கு உடனடி அனுமதி…. மத்திய சுகாதாரத் துறை….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம்.

அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் பலனாக இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் உறவினர்களின் கதறல் நாளுக்கு நாள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதி களைக் கொடுத்து உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன. அதுமட்டுமன்றி முக்கிய பிரபலங்கள் அனைவரும் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள ஏதுவாக வெளிநாடுகளிலிருந்து வரும் உதவிகளுக்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த உதவிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படுவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |