Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காய்கறியெல்லாம் வாங்க முடியாது… விரக்தியில் விவசாயி எடுத்த விபரீத முடிவு… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கால் மண்டியில் காய்கறி வாங்க மறுத்ததால் வியாபாரி நடு ரோட்டில் காய்கறிகளை கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி தினசரி மண்டிக்கு சிவகங்கை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவசுப்ரமணியம் விற்பனைக்காக புடலங்காய் மூட்டைகளை கொண்டு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் காய்கறிகளை விற்க முடியாது. அதனால் புடலங்காய் வேண்டாம் என்று வாங்க மறுத்துள்ளனர்.

இதனால் மனவேதனையடைந்த அவர் கொண்டு வந்த புடலங்காயை நடு ரோட்டில் கொட்டி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அப்பகுதியிலுள்ள மக்கள் போட்டி போட்டு புடலைங்காயை அள்ளிச் சென்றனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காய்கறிகளை அள்ளுவதற்கு குவிந்த மக்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர். மேலும் நடுரோட்டில் விவசாயி புடலங்காயை கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |