Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மே 30 வரை 15 நாட்கள் முழு ஊரடங்கு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் மே 30ஆம் தேதி வரை 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். கல்வி நிலையங்கள் மற்றும் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்படும். பேருந்து போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்படுகிறது. வங்கிகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |