Categories
மாநில செய்திகள்

மே-18 முதல் தனியார் மருத்துவமனைகளிலும்…. ரெம்டெசிவர் மருந்து கிடைக்கும் – தமிழக அரசு…!!!

கொரோனா தடுப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

கூட்டம் கூடுவதை தவிர்க்க ரெம்டெசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகளில் இருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையற்ற முறையில் ரெம்டெசிவர்  மருந்து கேட்டு சீட்டு அளிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டிய சூழலை தவிர்க்க இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. மேலும் மே 18 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |