சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை மார்க்கெட்டில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று மளிகை பொருட்களை வாங்கி சென்றுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட வேண்டுமென புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை, லீ பஜார், பால் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணிக்கு மளிகை கடைகள் திறந்து வியாபாரம் ஆரம்பித்துள்ளது.
இதனையடுத்து மளிகை கடையில் சமூக இடையில் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான பொருட்களை மக்கள் வாங்கிச் சென்றனர். இதனால் செவ்வாய்பேட்டை, லீ பஜார் போன்ற பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதுடன் கடைகளில் வியாபாரம் களைகட்டியது.