உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆடு மேய்க்கச் சென்ற 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில் தூக்கில் தொங்க விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், அமேதி கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி நேற்று காலை ஆடு மேய்ப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராத காரணத்தினால் அவரது பெற்றோர்கள் அச்சம் அடைந்து அங்கு அருகில் உள்ள பகுதிகளில் தேடி பார்த்தனர். அப்போது ஆடு மேய்க்க சென்ற இடத்தில் உள்ள ஒரு மரத்தில் கட்டி தூக்கில் தொங்க விடப்பட்ட நிலையில் இருந்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து பின்னர் மரத்தில் தொங்கவிட்டு உள்ளதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.