நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகின்றது. இதனால் நாளுக்கு நாள், இறப்பு விகிதங்களும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலையால் நாடே பெரும் துயரத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுனர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் உதவித்தொகை வழங்க டெல்லி அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் 2,80,000 பேட்ஜ் வைத்திருப்பவர்களுக்கும், 1,90,000 பெர்மிட் ஓட்டுநர்களும் பயன்பெறுவார்கள். அரசு வழங்கும் இந்த தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.