வேலூரில் மாவட்டத்தில் திருமணம் முடிந்து மூன்று மாதத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் ஜெயராமன்- ஜானகி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் முன்னாள் தலைமை ஆசிரியராக இருந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் இளைய மகன் ஜெயப்பிரகாஷ் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகின்றது. இந்நிலையில் ஜெயபிரகாஷ்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஜெயப்பிரகாஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் சிகிச்சை பெற்று வந்த ஜெயப்பிரகாஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மகன் இறந்த துக்கம்த்தை தாங்க முடியாமல் அழுதுகொண்டிருந்த அவரது தந்தையும் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவ்வாறு தந்தை- மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.