Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடும்பமே தற்கொலை…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் மாவட்டத்தில்  மகளை கொன்று விட்டு பெற்றோர்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானப்பட்டி பகுதியில் கோபிநாத் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும் நந்திதா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் கோபிநாத்தின் தாய் செங்கமலம் அதேப் பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது மகன் வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது.

மேலும் நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவினை உடைத்து உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் கோபிநாத் மற்றும் பவித்ரா இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இறந்த நிலையிலும் மகள் நந்திதா இறந்து கீழே பிணமாகவும் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாயார் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |