Categories
சினிமா தமிழ் சினிமா

மே மாத இறுதி வரை…. படப்பிடிப்புகள் எதுவும் நடக்காது…. பெப்சி தலைவர் அறிவிப்பு…!!!

மே மாத இறுதி வரை படப்பிடிப்புகள் நடைபெறாது என்று பெப்சி தலைவர் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் பல திரைப் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது தமிழகத்தில் வரும் மே 24-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், வரும் மே 31-ஆம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடைபெறாது என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

Categories

Tech |