கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழுஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்துமுக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாதவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இவ்வாறு கட்டுப்பாடு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஒரே நாளில் 4 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.