அமெரிக்காவில் ஒரு பெண்ணிற்கு லாட்டரியில் பரிசு விழுந்தும் அதனை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் வசிக்கும் ஒரு பெண் சூப்பர் லொட்டோ பிளஸ் என்ற லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். இதில் அவருக்கு $26 மில்லியன் பரிசு விழுந்திருக்கிறது. தகவல் அறிந்தவுடன் உடனடியாக தன் லாட்டரி சீட்டை தேடியபோது தான் அவருக்கு ஞாபகம் வந்திருக்கிறது. அதாவது தன் லாட்டரி சீட்டை பேண்ட் பையில் வைத்திருந்ததை மறந்து அதனை துவைத்துவிட்டார்.
எனவே லாட்டரி நிறுவனத்திடம் சென்று இது குறித்து தெரிவித்திருக்கிறார். எனினும் லாட்டரி சீட்டு இருப்பவர்களுக்குத்தான் பரிசு தொகையை கொடுக்க முடியும் என்று அந்த நிறுவனத்தினர் கூறிவிட்டனர். இதனால் அந்த பெண் லாட்டரி சீட் வாங்கிய கடையில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன.
அதனை ஆராய்ந்து பார்த்து தனக்குத் பரிசை தருமாறு கேட்டிருக்கிறார். லொட்டரி நிறுவன செய்தித் தொடர்பாளரான கேத்தி ஜான்ஸ்டன், இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.