கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றாமல் ஒரு ஆட்டோவில் 12 பேர் பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக ஆட்டோவில் செல்பவர்கள் டிரைவருடன் சேர்த்து மூன்று நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது காவல்துறையினர் அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி பார்த்த போது அந்த ஆட்டோவில் டிரைவரை சேர்த்து 12 பேர் நெருக்கமாக அமர்ந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந்த ஆட்டோவில் பயணித்தவர்களை காவல்துறையினர் கண்டித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதித்ததோடு, ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.