தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
மேலும் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மட்டுமல்லாமல் முன் களப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொரோனா களப்பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து மே 18 முதல் தனியார் மருத்துவமனைகளில் விற்பனை செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து ரெம்டெசிவிர் மருந்து தேவை பற்றி தனியார் மருத்துவமனை இணையம் மூலம் பதிவிடும் வசதி நாளை மறுநாள் முதல் அறிமுகமாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் விவரங்களோடு இணையத்தில் பதிவிட வேண்டும். ரெம்டெசிவிர் மருந்து தேவையை பதிவேற்றம் செய்யும் இணையத்தளம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். அரசிடம் இருந்து பெறப்படும் விலையில் விற்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.