நடிகர் விஜய் தன் மகனை கையில் வைத்திருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘தளபதி 65’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் விஜய் ஒரு குழந்தையை கையில் வைத்துள்ளார். இந்த குழந்தை வேறு யாரும் இல்லை நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தான். நடிகர் விஜய் மற்றும் அவரது மகன் சஞ்சய் இருக்கும் இந்த பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.