Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்த 10 வயது சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவையில் பரபரப்பு…!!

10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வடமாநில தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் 10 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு திடீரென வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியிடம் பேசி அவரை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன்பின் அந்த வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த இடத்திலேயே சிறுமி மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் சிறுமி மயங்கி கிடந்ததை பார்த்த சிலர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனையில் கண்விழித்து பார்த்த சிறுமி தனது தாயாரிடம் மர்ம நபர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்து தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக கோவை கிழக்கு பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பீளமேடு பகுதியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திரா என்ற வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்துள்ளது. அதன் பின் போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜிதேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |