Categories
தேசிய செய்திகள் வானிலை

எல்லாரும் ரெடியா இருங்க…. 7கிலோ மீட்டர் வேகதுல வருது…. 18ஆம் தேதி முக்கிய அலர்ட்….!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நீடித்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறி இலட்சத்தீவுகள் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி நேற்று நள்ளிரவு புயலாக உருமாறிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, தற்போது லட்சத்தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டவ் தே என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து, வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியை நோக்கிச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கண்ணுரிலிருந்து இருந்து 290 கிலோமீட்டர் தொலைவிலும், குஜராத்தில் இருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆயிரத்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது புயல் நிலை கொண்டுள்ளது.

இது வரும் 18ஆம் தேதி குஜராத் அருகே கரையைக் கடக்கலாம் எனவும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. டவ் தே புயலின் தாக்கம் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருக்கும். இதனால் இந்த ஐந்து மாநிலங்களிலும் தேசிய பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |