இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியாஅட்லீ தனது அம்மாவை முதல்முதலாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லீ. இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான தெறி,மெர்சல்,பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதை தொடர்ந்து அட்லீ அடுத்தது யாருடைய கூட்டணியில் படம் இயக்கப் போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
அந்த வகையில் அட்லீ அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இந்நிலையில் இளம் இயக்குனர் அட்லீயின் மனைவியான பிரியா அட்லீ தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு இந்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தின் மூலம் பிரியா அட்லீ தனது அம்மாவை ரசிகர்களுக்கு முதல்முதலாக அறிமுகப்படுத்தியுள்ளார்.