தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ படிக்கும் மாணவி திடீரென மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் கோவில் பகுதியில் சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் சுருதி அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.ஏ படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்து ஸ்ருதி திடீரென காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து சுருதியின் பெற்றோர் அவரை அக்கம்பக்கத்தினர் வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதனால் இது குறித்து சுருதியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுருதியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.