தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்துபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.இதற்கு மத்தியில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சிரமமில்லாமல் தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடுப்புசி மையங்களில் பொது வரிசை அல்லாது மாற்றுத்திறனாளிகளுக்கான தனிவரிசை ஏற்படுத்தவேண்டும் என்றும், இதை உடனே அமல்படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.