Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உதவியா இருக்கும்… நடைபெறும் சமூக விரோத செயல்கள்… விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை…!!

பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கும் உலர் களத்தை சீரமைக்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குமரலிங்கம் பகுதியில் மக்காச்சோளம் மற்றும் நெல் சாகுபடி நடைபெறுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் பயிர்களை அங்குள்ள உலர் களத்தில் காயவைத்து, அதன் பின் விவசாயிகள் வியாபாரத்திற்கு அதனை கொண்டு செல்வது வழக்கம். ஆனால் குமரலிங்கம் ராஜ வாய்க்கால் கரையில் அமைக்கப்பட்டுள்ள உலர் களம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கின்றது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, விவசாயிகளின் நலனுக்காக அமைக்கப்பட்ட இந்த உலர் களம் தற்போது பராமரிப்பின்றி கிடப்பதாகவும், அந்த இடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் கூறியுள்ளனர். மேலும் அந்த இடத்தில் உட்கார்ந்து மது அருந்தும் சிலர் பாட்டில்களை சுற்றியுள்ள வயல்வெளிகளில் வீசி செல்கின்றனர். எனவே சேதமடைந்து கிடக்கும் உலர் களத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |