ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். இன்று உத்தியோகத்தில் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். மனதில் உள்ளதை பிரதிபலிப்பீர்கள். மற்றவர்களுக்கு நீங்கள் முன்னுதாரணமாக செயல்படுவீர்கள். சாதுரியமான அணுகுமுறையால் நல்ல விஷயங்கள் நடக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வந்தாலும், மாலை நேரங்களில் சரியாகும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். எடுக்கும் முயற்சியில் கவனமாக மேற்கொள்ளுங்கள். நிதானத்தை கடைபிடியுங்கள். இன்று காதலில் உள்ளவர்களுக்கு சுமுகமான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தெய்வத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றையநாள் சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.