Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சொன்னால் கேட்க மாட்டீங்களா… மீறினால் அவ்ளோதான்… எச்சரித்த அதிகாரிகள்…!!

திருப்பூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி சுற்றி திரிந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் துறையினர் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் சுற்றித் திரிபவர்களை பிடித்து எச்சரித்து அனுப்புகின்றனர். மேலும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து திருப்பூர் மாநகர பகுதிகளில் முக கவசம் அணியாமல் வந்த 300 பேருக்கு தலா 200 ரூபாய் அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்களிடமிருந்து 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |