Categories
மாநில செய்திகள்

BREAKING : மக்களே உஷார் ”எல்லாருக்கும் 3 மாசம் கெடு” அமைச்சர் எச்சரிக்கை..!!

3 மாதத்தில் மழை நீர் சேகரிப்பை நிறுவா விட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் எஸ்.பி வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் மாநகராட்சி அலுவலகத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உள்துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள். இதில் பருவமழை  எதிர்வரும் பருவமழை தண்ணீரை சேகரிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது.

Image result for மழை நீர் சேகரிப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது ,  வட கிழக்கு பருவ மழையின் போது தண்ணீரை சேமிக்க மழைநீர்  சேமிப்பு கட்டமைப்பு அமைப்பது அவசியம். அரசு கட்டிடம் , தொழிற் சாலை, வீடு, கல்வி நிறுவனம் வணிக வளாகம் திரையரங்கம் திருமண மண்டபம் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும்.மூன்று மாதத்தில் மழை நீர் சேகரிப்பை நடைமுறைப்படுத்த விட்டால் நோட்டிஸ் கொடுத்து அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி எச்சரித்துள்ளார்.

Categories

Tech |