அஜித், விஜய்யுடன் இணைந்து எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை நடிகர் மகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் அஜித் மற்றும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய அளவில் சாதனைகள் படைத்து வருகிறது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.
#Throwback With #ThalaAjith na & #ThalapathyVijay na @actorvijay 🤩❤️ pic.twitter.com/ykIjqbsvI9
— Mahat Raghavendra (@MahatOfficial) May 16, 2021
அதேபோல் நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அஜித் மற்றும் விஜய்யுடன் இணைந்து எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை நடிகர் மகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.