Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஒடிசா மாநிலத்திலிருந்து… 26.6 டன் ஆக்சிஜன் நிரப்பிய லாரிகள்….திருவள்ளூர் வந்தடைந்தது…!!!

ஒடிசா மாநிலத்திலிருந்து சரக்கு ரயில் மூலமாக ,26.6 டன் ஆக்சிஜன் நிரப்பிய லாரிகள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்தடைந்தது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின்  2 ம் அலை வேகமாக அதிகரித்து வருகிறது.  தொற்று  பாதிப்பை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு  வருகிறது. இந்நிலையில் ஆக்சிசன் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும், பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ரயில் நிலையத்திலிருந்து, ஒடிசா மாநிலத்திற்கு 5 மெடிக்கல் காலி  லாரிகள், சரக்கு ரயில் வண்டியின் மூலமாக  அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் திருவள்ளூரில் கடந்த 12ஆம் தேதி அன்று ,அனுப்பி வைக்கப்பட்ட    2 லாரிகள் 26.6 டன் ஆக்சிஜனை  நிரப்பிக்கொண்டு  ஒடிசா மாநிலத்தில் இருந்து நேற்று, திருவள்ளூரை  வந்தடைந்தது. இந்த 2 ஆக்ஸிஜன் லாரிகளையும், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து  ஆக்சிஜன் நிரப்புவதற்காக மேலும் 4 டேங்கர் லாரிகள், திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து, ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பியுள்ளதாக  தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |