Categories
தேசிய செய்திகள்

கலக்கத்தில் காங்கிரஸ் ”ப.சிதம்பரத்திற்கு சம்மன்” அமலாக்கத்துறை அதிரடி…!!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றபோதுஏர் இந்தியா நிறுவனத்திற்கு , இந்தியன் ஏர்லைன்ஸ்   நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்கள் வாங்கப்பட்டன. இந்த விமானங்களை வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றனர். இதையடுத்து இந்த முறைகேட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கின்றது. யாரெல்லாம் இதில் முக்கிய பங்கற்றியுள்ளார்கள் என்று ஆராய்ந்து ,

Image result for ப.சிதம்பரம்

இடைத்தரகர் உட்பட அனைவரையும்  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக தற்போது அப்போது நிதியமைச்சராக இருந்த பா.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.இதனால் ப.சிதம்பரம் 23ஆம் தேதி என்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகி  விசாரணை குறித்த  கேள்விகளுக்கு பதில் அளிக்க இருக்கின்றார். இதனால் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |